பாதுகாவலர் மற்றும் தபேதரை ஆய்வுக்குப் பயன்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு துறைகளில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் எருமபட்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக கடைகளில் ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நெகிழி பொருட்களை உபயோகிக்கக் கூடாது எனக் கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வு நடவடிக்கையின்போது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தகவல் அளிக்காத அவர், தனது பாதுகாவலர் ஆய்வுப் பணிக்குப் பயன்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.