கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடைபெற்ற பசு பாதுகாப்பு யாத்திரை நிறைவு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
காஷ்மீரில் தொடங்கி சுமார் 4 ஆயிரத்து 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பசு பாதுகாப்பு யாத்திரை கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. பசுக்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 182 நாட்கள் இந்த யாத்திரையானது நடைபெற்றது.
விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், அகில பாரத கோ சேவா அமைப்பாளர் அஜித் பிரசாந்த் மஹோபாத்தரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காணொலி மூலமாகப் பங்கேற்றுப் பசு பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.