இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது திய கிளாஸிக் 650 ட்வின் பைக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பைக் 3 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. கிளாஸிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு, 650 சிசி இன்ஜினுடன் இந்த ட்வின் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினானது 47 hp பவர் மற்றும் 52.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. 14.7 லிட்டர் எரிபொருள் டேங்கைக் கொண்டிருக்கும் புதிய கிளாஸிக் 650 ட்வின் பைக் சுமார் 243 கிலோ எடையுடன், ராயல் என்ஃபீல்டின் மிகவும் கனமான பைக்காக வெளியாகியிருக்கிறது.