காஞ்சிபுரத்தில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நடப்பாண்டுக்கான பங்குனி மாத பிரம்மோற்சவம் 6 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருத்தேரில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கோயிலில் புறப்பட்ட தேரை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி வடம்பிடித்து இழுத்தனர்.