எலக்ட்ரானிக் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செல்போன், டிவி , வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தியில் பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 22 ஆயிரத்து 919 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இந்தியா எலக்ட்ரானிக் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மூலம் 59 ஆயிரத்து 350 கோடி ஈர்ப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் மூலம் 4 லட்சத்து 56 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.