மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலரை படுகொலை செய்துவிட்டு தலைமறைவானவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
நாவார்பட்டியில் டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் என்பவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் திண்டுக்கல் சரக ஐஜி தலைமையில் போலீசார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.