திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டேஜ் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடைக்கானல் பெரும் பள்ளம் பகுதியில் சிவராஜ் என்பவர் காட்டேஜ் நடத்தி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுரை அழகர் கோயில் அருகே போதை மீட்பு மையத்தில் சிகிச்சையிலிருந்தபோது அங்கிருந்தவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி மணிகண்டன், சந்தோஷ் மற்றும் அருண் ஆகிய 3 பேர் சிவராஜ் காட்டேஜில் பணி புரிந்துள்ளனர். இந்நிலையில் மது போதையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சிவராஜை கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன், சந்தோஷ், அருண் மற்றும் அவர்களது நண்பரான ஜோசப் பிராங்ளின் ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.