ஈரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 18-ம் தேதி திருவிழா தொடங்கிய நிலையில் நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் நிகழ்ச்சி 22-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியானது நாள்தோறும் இரவில் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கம்பத்திற்குப் பால், மஞ்சள் ஊற்றி வழிபாடு நடத்தினர்.