திண்டுக்கல்லில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 48 வார்டுகளில் தூய்மை பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முறையாக அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்தனர்.