சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அதிக பொதுமக்கள் கலந்துகொள்ளத் தேவையான விழிப்புணர்வு வழங்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சின்னப்ப நாயக்கன் பாளையம் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபைக் கூட்டத்தில், 50-க்கும் குறைவான மக்களே கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
மேலும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்காததால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை எனக்கூறி கிராம மக்கள் ஊராட்சி செயலர் கௌரியிடம் கேள்வி எழுப்பினர்.