ரம்ஜான் பண்டிகையையொட்டி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்தனர்.
ஒரு ஆட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 3 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாகச் சந்தை உரிமையாளர் தெரிவித்தார்.