மலேசியாவில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் தங்களது மகனைக் காப்பாற்ற வேண்டுமெனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் சிக்கம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் சாலை விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் தனது மகனைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.