இந்தியத் தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் எச்பி நிறுவனம், அதன் புதிய எலைட்புக் மாடல்களை சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த லேப்டாப்களில் ஏஎம்டி ரைசன் மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா பிராசசர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மாடல்கள் அனைத்திலும் எச்பி -யின் தனித்துவமான நியூரல் பிராசசிங் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 55 டிரில்லியன் கணக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவில் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜிஎல்ஏ 14-இன்ச் லேப்டாப்பின் விலை 2 லட்சத்து 21 ஆயிரத்து 723 ரூபாயில் தொடங்குகிறது.