கரகாட்டக்காரன் படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை போன்று மீண்டும் வாழைப்பழ காமெடியில் நடிக்க உள்ளதாக நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடிகர் செந்தில், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
நடிகர் செந்திலைக் கண்டதும், அங்கிருந்த பக்தர்கள் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசப்பதால் தமக்கு மன நிம்மதி கிடைப்பதாக தெரிவித்தார்.
கரகாட்டக்காரன் படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைபோன்று மீண்டும் வாழைப்பழ காமெடியில் நடிக்க உள்ளதாக கூறிய அவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதாக குறிப்பிட்டார்.