சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து உள்ள ஜிப்லி புகைப்படங்களை ஏராளமானோர் உருவாக்கி வருவதால், தங்களது நிறுவன ஊழியர்கள் தூக்கமின்றி தவிப்பதாக ஓபன் ஏ.ஐ., சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு ஓபன் ஏ.ஐ. நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது சாட் ஜிபிடி. இதன் மூலம் புகைப்படத்தில் உள்ள நபர்கள் மற்றும் பின்னணியில் உள்ளவற்றை ஓவியமாக மாற்றும் ஜிப்லி சேவை வந்துள்ளது.
இந்த நிலையில், தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் மற்றவர்கள் ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.