தெலங்கானா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது.
தெலங்கானாவில் ஐதராபாத் பல்கலைக் வளாகத்தை ஒட்டியுள்ள 400 ஏக்கர் நிலத்தில் I.T. பார்க் அமைக்க ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிலத்தை ஏலம் விடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரான செயல் எனக்கூறி ABVP அமைப்பினர் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் இருதரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.