சிவகங்கை தர்ம முனீஸ்வரர் கோயிலில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் திடீரென சாய்ந்து விழுந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர்.
மானாமதுரையில் உள்ள மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை நடுவே தர்ம முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் ஏராளமான மக்கள் இக்கோயில் முன்பு தங்கள் வாகனங்களை நிறுத்தி, தங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த கோயிலில் இருந்த சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம், திடீரென சாய்ந்து விழுந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 4 வழிச்சாலை பணிகளின்போதும் கோயிலும், ஆலமரமும் அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.