மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, விழுப்புரம் வானூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டி கலைஞரான குணால் கம்ரா, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை பெயரைக் குறிப்பிடாமல் துரோகி என விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே, முன்ஜாமின் கோரி குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது, வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமின் பெற்று கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, வானூர் நடுவர் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் குணால் கம்ரா நேரில் ஆஜரானார்.
அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, 2 பேர் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் புதுச்சேரியைச் சேர்ந்த கோபி, சரவணன் ஆகியோர் ஜாமின் அளித்தனர். வரும் 7ஆம் தேதி குணால் கம்ரா மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.