ஈரோட்டில் GST எண் மூலம் 35 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆடிட்டர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடமுகம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் இவர், உதயகுமார் என்ற ஆடிட்டர் மூலம் GST வரி செலுத்தி வந்தார்.
இந்நிலையில் அந்த GST எண்ணைப் பயன்படுத்தி உதயகுமார் 6 நிறுவனங்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியதாகத் தெரிகிறது.
இதனால், 35 லட்சம் ரூபாய் வரிப் பாக்கி இருப்பது தெரியவந்த நிலையில், ஆடிட்டர் உதயகுமார் மீது எஸ்பி அலுவலகத்தில் முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.