வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டுக்காக தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். இதில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ சஞ்சய் ஜாஜு, இணைச் செயலாளர் செந்தில் ராஜன் மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் திரைத்துறையை மேம்படுத்துவது, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.