தேனியில் தங்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி பட்டியலின மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளுக்கு முன் ஏழ்மை நிலையிலிருந்த பட்டியலின மக்களுக்குத் தமிழக அரசால் 4 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தைப் பட்டியலினத்தைச் சாராத தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்டியலின மக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பஞ்சமி நிலத்தில் வேலிகளைப் பிடுங்கி எரிந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.