காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தினர் வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கார்கே, தன் மீது அப்பட்டமான குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளதாகவும், அனுராக் தாக்கூரின் பேச்சு தன்னை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் ராஜினாமா செய்யத் தயார் எனவும் கார்கே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளில் இருந்தும் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.