உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மக்களவையில் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக மத்திய அரசு 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
இவை 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் கட்கரி கூறினார். மேலும், சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் இறக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
















