நக்சலைட் சகோதரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் பேசிய அவர், நக்சலைட்டுகள் சரணடையும் கிராமத்திற்கு 1 கோடி ரூபாய் மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அறிவித்திருப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அவ்வாறு ஆயுதங்களைக் கைவிடும் நக்சலைட்டுகளுக்கு அரசு முழு பாதுகாப்பு வழங்கும் என உறுதியளித்தார்.