பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்காக உலகம் முழுவதும் கலாச்சார மையங்களை அமைத்துள்ளார் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்ட பின்னர், 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி விழா மேடைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்குத் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் சிலையையும், அஸ்வினி வைஷ்ணவ் ராமர் – சீதா புகைப்படத்தையும் நினைவுப் பரிசாக அளித்தனர்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 10 ஆண்டுகளில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை தமிழகத்துக்குப் பிரதமர் மோடி கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவற்றை நடத்தி தமிழை போற்றி வரும் மோடி, தமிழுக்காக உலகம் முழுவதும் கலாச்சார மையங்களை அமைத்துள்ளார் எனக் கூறினார்.