திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட நகையை 2 சிறுமிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையை சேர்ந்த கவுதம் என்பவர் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக்காப்பு தொலைந்துவிட்டது.
இந்நிலையில் தொலைந்து போன தங்கக் காப்பை கண்டெடுத்த 2 சிறுமிகள், அதனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வறுமையிலும் நகையை ஒப்படைத்த சிறுமிகளை போலீசார் வெகுவாக பாராட்டினர்.