திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வயதான தம்பதியைக் கட்டிப் போட்டு நகைகளைக் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தளவாய் பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் – கமலவேணி தம்பதி, நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நால்வர், வயதான தம்பதியை வீட்டிற்குள் தூக்கிச் சென்று கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர் மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின் உட்பட மொத்தம் 21 சவரன் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகைகளைச் சேகரித்து, மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.