செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரையப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், கீழவளம் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்குக் கிடைத்த பணகொட்டை மீனை வாயில் கவ்வியபடி மீண்டும் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத மாக வாயில் கவ்விக் கொண்டிருந்த மீன் தொண்டைக்குள் சென்று சிக்கியது. இதில் மூச்சு விட முடியாமல் தவித்த மணிகண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.