திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண் குறித்து புகார் அளித்தும், காவல்துறையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாலட்சுமி நகரில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பெண் ஒருவர் புகைப்பிடித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், நீங்கள் யார் எதற்குக் கோயிலில் புகைபிடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அந்த பெண் ஆக்ரோஷமாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலளித்தும் போலீசார் வராததால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் வந்த போலீசார், பொதுமக்களைச் சமாதானம் செய்துவைத்து, கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.