ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர் எனவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.