மேற்குவங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 26 ஆயிரம் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் சுமார் 26 ஆயிரம் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், பணி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் முறைகேடு செய்யாத ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி போராட்டங்கள் தொடர்வதால், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.