மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பிரியாணி வழங்கியது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எதுவும் செய்யவில்லை எனவும், மாறாக, அவர்கள் அஜ்மல் கசாப்புக்குப் பிரியாணி வழங்கினர் எனவும் தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் மோடி, தான் கூறியதைப் போல குற்றவாளியை நீதியின் முன் நிறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.