ஆஸ்கர் விருது வழங்கும் பிரிவுகளில் ‘ஸ்டன்ட் டிசைன்’ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
2028ம் ஆண்டில் இருந்து சிறந்த சண்டை வடிவமைப்பு என்ற புதிய பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ம் ஆண்டின் சிறந்த படங்களுக்கு 2028ல் நடைபெறும் 100-வது ஆஸ்கர் விழாவில் விருது வழங்கப்படுகிறது.