2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறுதியானதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாஜக – அதிமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்த அமித்ஷா, இந்தக் கூட்டணியால் இரு கட்சிகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் என்றும் கூறினார்.