விருதுநகரில் உள்ள திரையரங்கில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விருதுநகரில் உள்ள ராஜலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்டது.
அங்குக் குவிந்த அஜித் ரசிகர்கள், தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆனதால் வெகுநேரமாக வெளியே காத்திருந்தனர். பின்னர் நுழைவு வாயில் திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து பவுன்சர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தாக்கியது தொடர்பான காட்சி வெளியானது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனுஷ் குமார் என்பவரை 9 பேர் சரமாரியாகத் தாக்கினர். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.