ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெல்போர்னில் உள்ள துணை தூதரகத்தின் பெயர் பலகையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.