திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மறைந்த மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் சிலை வைத்த கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்கானூர் தக்டிவட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி ஈஸ்வரி, 3 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இதனால் வேதனையடைந்த சுப்பிரமணி, 15 லட்சம் ரூபாய் செலவில் 6 அடி உயரத்தில் மனைவியின் சிலையை நிறுவி அதனை வணங்கி வருகிறார். மேலும், மனைவியின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆயிரத்து ஒரு பெண்களுக்கு இலவசமாகச் சேலை வழங்கினார்.