அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணவிடம் என்ஐஏ அதிகாரிகள் நாள்தோறும் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து கடந்த 9ஆம் தேதி இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் நாள்தோறும் 8 முதல் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.தீவிரவாதி தஹாவூர் ராணா விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், தனக்காக எந்தவித கோரிக்கையையும் வைக்கவில்லை என்றும் என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாரணையில் தெரியவரும் பல்வேறு முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.