தமிழ் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய தமிழ் வருடமான விசுவாவசு ஆண்டின் பஞ்சாங்கத்துக்கு வேதியர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர், பஞ்சாங்கப் பலன்களை வாசித்தனர். தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி பக்தர்களுக்கு புத்தாண்டின் பஞ்சாங்கம், பனை ஓலை விசிறி, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கி அருளாசி கூறினார்.