மறைந்த சேலம் சேவா பாரதி பிரசாரகரும், பாத சிகிச்சை நிபுணருமான சுந்தரராஜன் உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சேவா பாரதியின் பிரசாரகரும் பாத சிகிச்சை நிபுணருமான சுந்தர்ராஜன் மாரடைப்பால் காலமானார். அவரது கண்கள் உடனடியாக தானம் செய்யப்பட்டன.
தொடர்ந்து அவரது உடல் சேலம் மறவனேரி பிரதான சாலையில் உள்ள தேசிய சேவா சமதி அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்குச் சேவா பாரதி மாநிலச் செயலாளர் ஜெகதீஷ், தென்மாநில சேவா பொறுப்பாளர் ரவிக்குமார் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சுந்தர்ராஜன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, செவ்வாய்பட்டியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக சேலம் சேவா பாரதி பிரசாரகர் சுந்தரராஜன் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், மும்பையில் நியூரோ தெரபி கற்று, தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு சுந்தரராஜன் பயிற்சி அளித்ததாகப் புகழாரம் சூட்டினார்.