ஜப்பானில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை மான் சாப்பிட முயலும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவின் அளவு குறைந்துள்ளது. இந்த சூழலில், சகுரா என அழைக்கப்படும், செர்ரி பிளாசம் மரத்தில், மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவை வசந்த காலத்தை வரவேற்று உதிரும்.
தற்போது கண்ணை கவரும் வகையில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்துள்ளனர். இந்த நிலையில், மான் ஒன்று செர்ரி மலர்களை பறித்துச் சாப்பிடும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.