நெல்லை அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார்ப் பள்ளி ஒன்று 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்பட்டது.
பள்ளி பாடவேளை தொடங்கிய சில மணிநேரத்தில், 8ம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவனே அரிவாளால் வெட்டியுள்ளார்.
தடுக்க வந்த ஆசிரியரையும் மாணவர் அரிவாளால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 2 பேரையும் அரிவாளால் தாக்கிய மாணவன், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பென்சில் கொடுத்து வாங்குவது தொடர்பான பிரச்சனையில், 8-ஆம் வகுப்பு மாணவனை சக மாணவனே அரிவாளால் தாக்கியது தெரியவந்துள்ளது.