ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
லசானாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், துப்பாக்கி ஏந்தி தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் மற்றும் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.