அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் எதிரொலியாகச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், இதன் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியையும் அதிகரிக்க வேண்டுமென இந்திய வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.