ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுத்து ரன்களை குவித்து வந்த நிலையில், கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்ததால் இரு அணிகளும் சம ரன்களில் இருந்தன. இதையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி 4 பந்துகளில் 13 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது.