சேலம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நடைமேடைகள் சிறிய கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழலில், பயணிகள் வெயிலுக்கு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பிடம் மூடப்பட்டுள்ள நிலையில், கட்டண கழிப்பறைகளில் அதிக வசூல் செய்வதாகவும் சமூக விரோதிகளின் கூடாரமாக பேருந்து நிலையம் மாறி வருகிறது எனவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், திமுகவினரின் தலையீடு காரணமாகவே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.