திருப்பூரில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவலரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற காவலர் சத்யராஜ், ராகுல் என்ற இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராகுலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.