சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரம் ரூபாயை தாண்டியது.
நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக ஒரு சவரன் 71 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஒரு சவரன் தங்கம் 840 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.