பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோயிலில் ஹரி-ஹரன் சந்திப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி கிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.13 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 5ம் நாளில் ஹரி-ஹரன் சந்திப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
கரிகிருஷ்ணப் பெருமாளும், அகத்தீஸ்வரரும் சந்திக்கும் இந்நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கருடவாகனத்தில் பெருமாளும், நந்திவாகனத்தில் சிவனும் எழுந்தருளிய நிலையில், மனமுருகி பக்தர்கள் வழிபட்டனர்.
பரத்வாஜ முனிவர் ஆசிரமம் முன்பாக வான வேடிக்கையுடன் இந்நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.