திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவர், தனது நண்பர்கள் 5 பேருடன் கேரளாவில் உள்ள தோமையார் பேராலயத்திற்கு காரில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
வேடசந்தூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சின்னப்பன், அவரது நண்பர்கள் ஜான் கென்னடி, ராபர்ட் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.